சுமை தூக்கும் தொழிலாளி வெட்டிக்கொலை. மதுரையில் பரபரப்பு

சுமை தூக்கும் தொழிலாளி வெட்டிக்கொலை.  மதுரையில் பரபரப்பு


" alt="" aria-hidden="true" />



 மதுரை அவனியாபுரம்  ராஜாமான்  நகரை சேர்ந்த  ராமமூர்த்தி வயது  24.  இவரது தகப்பனார் பெயர்   நல்லூசாமி.  ராமமூர்த்தி என்பவர்  இந்தப் பகுதியில் சுமை தூக்கும் தொழிலாளியாக இருந்து வருகிறார்.  ராமமூர்த்தி   நேற்று நள்ளிரவு  சிந்தாமணி கண்ணன்  காலனி வழியாக வீட்டுக்கு  வந்து கொண்டிருந்தார்.  அப்போது அவரை  நாலு பேர் சேர்ந்த கும்பல் வழிமறித்தது.  இதனை சுதாரித்துக்கொண்ட ராமமூர்த்தி அவர்களிடம் இருந்து தப்பிக்க  முயற்சி செய்த  அப்போது அந்த கும்பல்  ராமமூர்த்தி  தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  அந்த சமயத்தில் ராமமூர்த்தியை  அரிவாளால் சரமாரியாக தாக்கினார்கள்.  இதில் பலத்த காயமடைந்த ராமமூர்த்தி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.  இது தொடர்பாக அவனியாபுரம் காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். படுகொலை செய்யப்பட்ட ராமமூர்த்திக்கு  சுமை தூக்கும் தொழில் மூலமாக ஏதேனும்  எதிரிகள் உள்ளனரா , வேற எதாவது பகை உள்ளதா  என வெவ்வேறு கோணங்களில்  காவல்துறையினர்  விசாரணை நடத்தி வருகின்றனர்.  கொரோனா வால்  ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில்  இதுபோன்ற  கொடூரமான செயல்களில் ஈடுபடுகின்ற  குற்றவாளிகளை காவல்துறையினர் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்   என்று  அப்பகுதி மக்கள் காவல் துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 


Popular posts
தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பாக
Image
இளங்குண்ணி ஊராட்சி கல்லடாவி கிராமத்தில் சாமிக்கண்ணு கல்வி கிராம வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் கொரோனா வைரைஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாக பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது
Image
புதுச்சேரி மிஷன் யுமானிடியர் இந்தியா மற்றும் இணை இயக்குனர் மருத்துவ பணிகள் இணைந்து கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி
Image
மதுரையில் நரிக்குறவர் காலனியில் மக்களுக்கு காவல்துறையினர் நேரில் சென்று உதவி
Image
வாணியம்பாடி அருகே தளபதி அறிவாலயம் கட்டிடத்தை கொரோனா நோய் தடுப்பு பிரிவாக பயன்படுதுக்கொள்ள திமுக இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் வி.எஸ் ஞானவேலன் மாவட்ட ஆட்சியர் சிவா அருளுக்கு மினஞ்சல் மூலம் தகவல்.
Image