தேனி
தேனி,வேப்பம்பட்டி கிராம மக்களின் ஒற்றுமை விபத்தில் படுகாயமடைந்த அண்டை உறவுக்கார ஊரான பூமலைக்குண்டு கிராமத்தைச் சார்ந்தவரின் மருத்துவ செலவிற்காக ஒரு கிராமமே ஒன்று சேர்ந்து நிதி வசூல் செய்து ரூ.இரண்டு இலட்சத்து இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் கொடுத்து உதவிக்கரம் நீட்டிய வேப்பம்பட்டி கிராம மக்களின் ஒற்றுமைக்கான ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வு
தேனி,பூமலைக்குண்டு கிராமத்தைச் சேர்ந்த பொன்ராம் இவரது மகன் லாரி டிரைவரான பெத்தணன் என்பவர் இரு தினங்களுக்கு முன்பு விபத்தில் படுகாயம் அடைந்து ஒரு கை மற்றும் ஒரு காலை இழக்கும் சூழலில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஏற்கனவே அவரது ஒரு கால் அகற்றப்பட்டது. மேலும்,அவரது கை, காலை சரி செய்வதுக்கு மருத்துவ செலவாக சுமார் ரூ.8 முதல் 10 இலட்சம் வரை செலவாகும் என மருத்துவர்கள் கூறியிருந்தனர்.
அவரின் ஏழ்மையான குடும்பத்தால் உடனே அந்தத் தொகையை ஏற்பாடு செய்ய இயலாத காரணத்தால் முதற்கட்டமாக பூமலைக்குண்டு கிராமத்தைச் சார்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும்பண உதவி செய்து அவரின் மருத்துவ செலவை ஏற்று வரும் நிலையில் இத்தகவலயறிந்தவுடன் வேப்பம்பட்டி இளைஞர்களின் தூண்டுதலின் பேரில் ஊராட்சி தலைவர் ரத்தினம் விஜயசாந்தி அவரின் முன்னிலையில் ஒரு குழுவாகவும், பால்காரர் பிரபு என்ற பெத்தணராஜா தலைமையில் ஒரு குழுவாகவும் ஒன்றிணைந்து அண்டை ஊரில் விபத்தில் படுகாயமடைந்தவருக்குஒரு கிராமமே ஒன்றிணைந்து வீடு வீடாக சென்றும், வெளியூர்களில் வசித்து வரும் உறவுகளிடத்திலும் இவ்விரண்டு குழுவினரும் ஒன்று சேர்ந்து நிதி வசூல் செய்த ரூ.இரண்டு இலட்சத்து இரண்டாயிரத்து ஐநூறு ரூபாயினை 29.01.2020 அன்று மாலை 6 மணியளவில் பூமலைக்குண்டு கிராம ஊர் பெரியோர்கள் முன்னிலையில் கொடுத்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களின் ஒற்றுமை ஓங்கி நிற்பதும், பிறருக்கு உதவும் மனப்பாங்கும் அப்பகுதியில் பெரும் நெகிழ்வை ஏற்படுத்தி வருகின்றது மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்ட கிராமத்தை தேனி மாவட்டத்திலிருந்து மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாராட்டி வருகின்றது குறிப்பிடத்தக்கது