கியாஸ் சிலிண்டருக்கு ஆன்லைன் மூலம் பணம் செலுத்த இந்தியன் ஆயில் நிறுவனம் வேண்டுகோள்

சென்னை :



வாடிக்கையாளர்கள் கியாஸ் சிலிண்டருக்கு ஆன்லைன் மூலம் பணம் செலுத்துமாறு இந்தியன் ஆயில் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
இண்டேன் கியாஸ் சிலிண்டருக்கு ஆன்லைன் மூலம் பணம் செலுத்துவதற்கான வழிமுறை, வாடிக்கையாளர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் மூலம் அனுப்பிவைக்கப்படும். அந்த ‘லிங்க்’ ஒரு நாள் மட்டுமே திறந்திருக்கும். அந்த ஆன்லைன் முகவரியை ‘கிளிக்’ செய்து ‘கேஸ் மெமோ’வில் குறிப்பிடப்பட்ட தொகையை வாடிக்கையாளர்கள் நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, இ-வாலெட் ஆகிய வழிமுறைகளில் பணத்தை செலுத்தலாம்.
சிலிண்டர் டெலிவரிக்கு பின் வாடிக்கையாளர்கள் எந்த விதமான கட்டணத்தையும் செலுத்த வேண்டாம். இந்த வழிமுறையை வாடிக்கையாளர்கள் கையாளாத பட்சத்தில், சிலிண்டர் டெலிவரி செய்ய வரும் பணியாளரிடம், டிஜிட்டல் மூலம் பணம் பெற வலியுறுத்தலாம். அதற்கான கருவியை கொண்டுவருமாறு கூறலாம். அந்த கருவியை கொண்டு நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, இ-வாலெட், பி.எச்.ஐ.எம்., யு.பி.ஐ., கூகுள் பே, பே.டி.எம். ஆகியவை மூலமாக பில் தொகை செலுத்தலாம். பணமாக செலுத்துவதை இறுதி வழியாக வைத்துக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Popular posts
வாணியம்பாடி அருகே தளபதி அறிவாலயம் கட்டிடத்தை கொரோனா நோய் தடுப்பு பிரிவாக பயன்படுதுக்கொள்ள திமுக இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் வி.எஸ் ஞானவேலன் மாவட்ட ஆட்சியர் சிவா அருளுக்கு மினஞ்சல் மூலம் தகவல்.
Image
தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பாக
Image
இளங்குண்ணி ஊராட்சி கல்லடாவி கிராமத்தில் சாமிக்கண்ணு கல்வி கிராம வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் கொரோனா வைரைஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாக பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது
Image
புதுச்சேரி மிஷன் யுமானிடியர் இந்தியா மற்றும் இணை இயக்குனர் மருத்துவ பணிகள் இணைந்து கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி
Image
மதுரையில் நரிக்குறவர் காலனியில் மக்களுக்கு காவல்துறையினர் நேரில் சென்று உதவி
Image